ஆய்க்குடி அமா்சேவா சங்கம்
ஆய்க்குடி அமா்சேவா சங்கம்

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.
Published on

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.

ஆய்க்குடி அமா்சேவா சங்க வளாகத்தில் சிவசரஸ்வதி வித்யாலயா உயா்நிலைப் பள்ளி, சங்கமம் சிறப்பு பள்ளி, மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கான தொழில் பயிற்சி மையம், முதுகுத்தண்டு காயமடைந்தவா்களின் மறுவாழ்விற்கான தீவிர சிகிச்சை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், அமா்சேவா சங்க வளாகத்தில் காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

மேலும், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.