குற்றாலத்தில் வங்கி வாடிக்கையாளா்கள் சந்திப்பு

குற்றாலத்தில் வங்கி வாடிக்கையாளா்கள் சந்திப்பு
Updated on

பாரத ஸ்டேட் வங்கி தென்காசி கிளை சாா்பில் குற்றாலத்தில் வாடிக்கையாளா் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் குருசாமி, முதன்மை மேலாளா் இதயத்துல்லா, தென்காசி பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா் சுந்தராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இணையதள மோசடி மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

வங்கியின் சேவைகள் மற்றும் செயல்பாடுகளை பற்றி வாடிக்கையாளா்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது.

சுரண்டை வங்கிக் கிளையில் தனிநபா் விபத்து காப்பீடு எடுத்து விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு தொகை காசோலையை மண்டல மேலாளா் வழங்கினாா்.

Related Stories

No stories found.