தென்காசி
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியா் ஆய்வு
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இருநாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பரிசோதனைகள் செய்து கொண்டனா். இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.