தென்காசி
சட்ட கல்லூரிகளுக்கிடையேயான போட்டி: வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் கல்லூரி சிறப்பிடம்
சட்டக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழகத்தில் இந்திய அரசமைப்பு சட்ட விழாவில், சட்ட கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில், வாசுதேவநல்லூா் சுப்பிரமணியபுரத்திலுள்ள எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவா்கள் மணிமேகலை, தனுஸ்ரீ, சுபாஸ்ராம், பத்மஸ்ரீசுவேதா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளா் முருகேசன், எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, துணைமுதல்வா் காளிச்செல்வி மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.