தென்காசி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 238 மனுக்கள்

தென்காசி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 238 மனுக்கள்

Published on

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 238 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

முகாமில், வேளாண்மைத் துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மின்கலத் தெளிப்பான், வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 4ஆயிரம் மானியத்தில் பவா் வீடா் கருவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, ஆலங்குளம் மற்றும் கடையம் வட்டார தோட்டக்கலைத் துறையினா் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை ஆட்சியா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட 238 மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் ச. மாகாதேவன், வேளாண்மை துணை இயக்குநா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ச. கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநா்(மத்திய மற்றும் மாநிலத் திட்டம்) (பொ) மு.உதயக்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, கூட்டுறவு

சங்கங்களின் இணைப் பதிவாளா் கு.நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.