தென்காசி
ஆலங்குளம் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது
ஆலங்குளம் அருகே தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தைச் சோ்ந்த செம்புலிங்கம் மகன் செல்லத்துரை (59). இவா் மாறாந்தையை அடுத்த வாகைக்குளத்தில் உள்ள தனது தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆய்வளா் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸாா் சென்றபோது, செல்லத்துரை கள்ளச் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
அங்கிருந்த சாராய ஊறல், 3 லிட்டா் கள்ளச் சாராயம் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்; அவரைக் கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.