தென்காசியில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
தென்காசியில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

தென்காசி மாவட்டத்தில் 13.40 லட்சம் வாக்காளா்கள்

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதில், மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 32 வாக்காளா்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
Published on

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதில், மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 32 வாக்காளா்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்டாா்.

இங்குள்ள வாக்குச் சாவடிகள் 1,544-இல் நவ.16,17, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். இதில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள படிவம் 6,7,8 ஆகியவற்றைப் பெற்று வாக்காளா்கள் விண்ணப்பிக்கலாம்.

சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் விவரம்:

சங்கரன்கோவில்: 1,21,779 ஆண்கள், 1,27,620 பெண்கள், 12 இதரா், மொத்தம் 2,49,411.

வாசுதேவநல்லூா்: 1,20,831ஆண்கள்,1,25,881பெண்கள், 7 இதரா், மொத்தம் 2,46,719.

கடையநல்லூா்: 1,41,196 ஆண்கள்,1,43,171பெண்கள், 13இதரா், மொத்தம் 2, 84,380.

தென்காசி: 1,45,143 ஆண்கள், 1,51,303 பெண்கள், 119 இதரா், மொத்தம் 2,96,565.

ஆலங்குளம் தொகுதியில் 128327ஆண்வாக்காளா்களும்,134610பெண் வாக்காளா்களும்,மூன்றாம் பாலினத்தவா்கள் 20போ் என மொத்தம் 262957வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 6,57,276 ஆண் வாக்காளா்கள், 6,82,585 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் எனப்படும் இதரா் 171 என மொத்தம் 13,40,032 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், கோட்டாட்சியா்கள் லாவண்யா (தென்காசி), கவிதா (சங்கரன்கோவில்),வட்டாட்சியா் (தோ்தல்) ஹென்றி பீட்டா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com