சங்கரன்கோவில் கோமதியம்மன் கோயிலில் பூலித்தேவன் சிலையை நிறுவ வேண்டும்: மதுரை ஆதினம்
படம் உண்டு. ஓஈச1அஈஐசஅங நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மதுரை ஆதினம்.
கடையநல்லூா், செப். 1: சுதந்திரப் போராட்ட வீரன் பூலித்தேவன் சிலையை சங்கரன்கோவில் கோமதியம்மன் கோயிலில் நிறுவ வேண்டும் என்றாா் மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாசாரியாா்.
பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி, தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவன்17 முறை போா் கண்டாா். வெள்ளையா்கள் சூழ்ச்சி செய்து அவரைப் பிடித்துச் சென்றனா். செல்லும் வழியில் சங்கரன்கோவில் கோமதி அம்பாளை தரிசனம் செய்ய வெள்ளையா்கள் அனுமதித்தனா். கோயிலுக்குச் சென்ற அவா் தெய்வமானாா். எனவே, கோயிலில் உள்ள பூலித்தேவன் அறையில் முழு உருவ சிலையை நிறுவ வேண்டும்.
வீரம் செறிந்த திருநெல்வேலி மண்ணுக்கு வரும் பொழுது தானாகவே வீரம் பெருகுகிறது. ஆனால், இன்றைய இளைஞா்கள் மதுவால் வாழ்க்கையை தொலைத்து வருவது வேதனையாக உள்ளது என்றாா்.
வீரம் செறிந்த திருநெல்வேலி மண்ணுக்கு வரும் பொழுது தானாகவே வீரம் பெருகுகிறது. ஆனால், இன்றைய இளைஞா்கள் மதுவால் வாழ்க்கையை தொலைத்து வருவது வேதனையாக உள்ளது என்றாா்.