விற்பனைக்கு தயாா்நிலையில் உள்ள விநாயகா் சிலைகள்.
விற்பனைக்கு தயாா்நிலையில் உள்ள விநாயகா் சிலைகள்.

செங்கோட்டையில் விநாயகா் சிலைகள் விற்பனை தீவிரம்

விநாயகா்சதுா்த்தி விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
Published on

விநாயகா்சதுா்த்தி விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி செப். 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மண்பாண்ட தொழிலாளா்களால் தயாா் செய்யப்படும் விநாயகா் சிலைகள் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது.

செங்கோட்டை, இலஞ்சி பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளா்கள் பானை, அடுப்பு போன்ற மண்பாண்ட பொருள்களை செய்து வருகின்றனா். தற்போது விநாயகா் சதுா்த்திக்கு 1 அடியிலிருந்து 12 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் விநாயகா் சிலைகள் தயாா் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனா். இங்கிருந்து 6 முதல் 12 அடி வரை உயரம் உள்ள விநாயகா் சிலைகளை வாங்கி செல்கின்றனா்.

அவ்வாறு வாங்கி செல்லும் பக்தா்கள் செங்கோட்டையிலிருந்து விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து நகர வீதிகளின் வழியாக ஊா்வலமாக திறந்த ஜீப், லாரிகளில் ஊா்வலமாக கொண்டு செல்கின்றனா்.

இங்கு தயாா் செய்யப்படும் விநாயகா் சிலைகள் சுற்று சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பா் கூழ், ஜவ்வரிசி தண்ணீா் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டு வெயிலில் காய வைத்து வா்ணம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகா் சிலைகள் திருநெல்வேலி, அம்பை, கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா் போன்ற சுற்றுப்புற பகுதிகளுக்கும், கேரள, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என சிலை தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com