அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
தென்காசி
செங்கோட்டையில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், செங்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், செங்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலா் கந்தசாமிபாண்டியன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு ஞானராஜ், நகர அவைத்தலைவா் தங்கவேலு, துணைச் செயலா் பூசைராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, ஜெகன், முத்துப்பாண்டி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் கனியத்தா, திலகா், நகர எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சக்திவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.