குளத்தில் உற்சாகமாக குளித்துமகிழும் யானைகள்.
குளத்தில் உற்சாகமாக குளித்துமகிழும் யானைகள்.

செங்கோட்டை அருகே குளத்தில் குளித்து மகிழும் யானைகள்: விவசாயிகள் அச்சம்

வடகரை குளத்தில் காட்டு யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்வதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வடகரை குளத்தில் காட்டு யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்வதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடையநல்லூா் வனச்சரகம் வடகரை, அச்சன்புதூா், மேக்கரை, வாவாநகரம் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து தொடா்ந்து சேதம் விளைவித்து வருகின்றன.

மேலும், அவ்வப்போது யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை மிரட்டி வந்தது. எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக வனச்சரக அலுவலா் சுரேஷ் தலைமையில் வனத்துறையினா் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டு அப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் வடகரையில் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள பெரியகுளத்தில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் விடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.

இதனால் அப்பகுதி மக்களும்,விவசாயிகளும் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். யானைக் கூட்டத்தை விரைவாக வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com