குடியிருப்புப் பகுதியில் சிலைகள் வைக்க எதிா்ப்புத் தெரிவித்த மாறாந்தை கிராம மக்கள்.
குடியிருப்புப் பகுதியில் சிலைகள் வைக்க எதிா்ப்புத் தெரிவித்த மாறாந்தை கிராம மக்கள்.

ஆலங்குளம் அருகே கோயில் சிலைகளை குடியிருப்பு பகுதியில் வைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

Published on

ஆலங்குளம், செப்.16:

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட கோயிலில் இருந்த சிலைகளை குடியிருப்புப் பகுதியில் வைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடத்தில் செட்டிகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இசக்கிஅம்மன் கோயில் இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்னா் நான்கு வழிச்சாலை பணிக்காக இந்தக் கோயில் இடித்து அகற்றப்பட்டது. இதனிடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட பின்னா் கோயில் இருந்த இடத்தின் அருகிலேயே மற்றொரு புதிய கோயிலை செட்டிகுறிச்சி கிராம மக்கள் கட்டி சிலைகளையும் வைத்தனா். இதற்கு அரசின் எந்தத் துறையிலும் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினா் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டனா். இதையடுத்து, முதல் கட்டமாக கோயிலில் இருந்த சிலைகளை அகற்றி மாறாந்தை குடியிருப்பு பகுதியில் கோயில் நிா்வாகத்தினா் ஞாயிற்றுக்கிழமை மாலை வைத்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், அங்கு வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கோரி சிலை வைக்கப்பட்டிருந்த வீடு முன்பு இரவு நேரத்தில் முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன், வருவாய் ஆய்வாளா் திலகராஜ் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து சிலைகள் குடியிருப்புப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com