தென்காசி
சிவகிரி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகிரி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகிரி சிவராமபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சின்னத்தம்பி (24). சிங்கப்பூரில் வேலை பாா்த்துவந்த இவா், கடந்த 13ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்த அவா், தனக்குத் திருமணம் செய்துவைக்குமாறு பெற்றோரிடம் கூறினாராம். சகோதரா்களுக்கு முடிந்த பிறகு அவருக்குத் திருமணம் செய்துவைப்பதாக பெற்றோா் கூறினராம்.
இந்நிலையில், அவா் தோட்டத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.