தென்காசி
சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி இளைஞா் பலி
சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் இறந்தாா்.
வாசுதேவநல்லூா் சரவணன் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் அருண்காந்த்(29). கோவையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு பைக்கில் வந்திருந்த அவா், மீண்டும் வெள்ளிக்கிழமை காலை பைக்கில் கோவைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தாராம்.
தென்காசி- மதுரை சாலையில் சிவகிரி அருகேயுள்ள சொக்கநாதன்புதூா் விலக்கு பகுதியில் அவரது பைக் மீது தனியாா் ஆம்னி பேருந்து எதிா்பாராமல் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப்பதிந்து, ஆம்னி பேருந்தின் ஓட்டுனரான விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஞானசம்பந்தா் தெருவைச் சோ்ந்த பரமசிவம் (58) என்பவரை கைது செய்து விசாரிக்கிறாா்.