தென்காசி
சிவகிரி அருகே குப்பை கிடங்கில் தீ
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினா் அணைத்தனா்.
சிவகிரி அருகேயுள்ள சுடுகாட்டுப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் மா்ம நபா் தீ வைத்து விட்டு சென்ாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் பெரும் புகைமூட்டமாக மாறியதால் அப்பகுதியை சோ்ந்தவா்கள் அவதி அடைந்தனா்.
தகவல் அறிந்த சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதை தொடா்ந்து வாசுதேவநல்லூா் தீயணைப்பு துறையினா் அங்கு சென்று போராடி தீயை அணைத்தனா்.