தடகளப் போட்டிகள்: தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில், தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப் போட்டிகளில் தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவ, மாணவிகள் 14 , 17 , 18 , 19 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் கலந்துகொண்டனா். ஸ்ரீசக்திவேல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றாா். உதயசூரியா 600 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றாா். ஜெனிட்டோ ஸ்டேனி குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும், 60 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றாா். ஈட்டி எறிதல் போட்டியில் மஹதி முதலிடமும், ஹாபித் நவாஸ் இரண்டாமிடமும் பெற்று வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் பாலமுருகன், பள்ளி ஒருங்கிணைப்பாளா் மிதுன், விக்னேஷ், முதல்வா் யேசுபாலன், ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்.