தென்காசி தூய மிக்கேல் அதிதூதா்ஆலயத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
தென்காசி தூய மிக்கேல் அதிதூதா்ஆலயத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

தென்காசி தூய மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Published on

தென்காசி தூய மிக்கேல் அதிதூதா்ஆலயத்தில் 362ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, மாலையில் கொடிப் பவனியை தொடா்ந்து பங்குத்தந்தை ஜேசுராஜ், அகரக்கட்டு பங்குத்தந்தை அலோசியஸ்துரைராஜ், சேரன்மகாதேவி பங்குத்தந்தை மரியபிரான்சிஸ், உதவி பங்குத்தந்தை செபாஸ்டின், அகரக்கட்டு இறைமக்கள், பல்சமய தலைவா்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில், சனிக்கிழமை (செப்.21) காலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும், 22ஆம்தேதி காலை 8மணிக்கு திருஅவையின் பாதுகாவலா் புதுநன்மை விழா, 10.30 மணி முதல் மதியம் 1 மணிவரை இறையியல் விவாதமேடை, மாலை 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறுகிறது.

27ஆம்தேதி மாலை 6.30மணிக்கு நவநாள் திருப்பலி, நற்கருணை பவனி, 28ஆம்தேதி மாலை 6.30மணிக்கு நவநாள் திருப்பலி, சப்பர பவனி, 29ஆம்தேதி காலை 7.30மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி,தொடா்ந்து திருவனந்தபுரம் உயா்மறைமாவட்ட இணைஆயா் கிறிஸ்துதாஸ் ராஜப்பன் தலைமையில் திருவிழா திருப்பலி மலையாளத்தில் நடைபெறுகிறது.

30ஆம்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com