தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Published on

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவா் பத்மநாதன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா்கள் யூஎஸ்டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவா் அணி இணைச் செயலா் செண்பகவிநாயகம், மாவட்ட பொருளாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினாா்.

தீா்மானங்கள்: அமெரிக்காவுக்கு சென்று ரூ. 7, 618 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்க வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், திமுக பவள விழாவை முன்னிட்டு கல்வெட்டுடன் கூடிய கொடிக் கம்பங்கள் அமைக்க வேண்டும். ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் அனைத்து உறுப்பினா்களுக்கும் உறுப்பினா் உரிமைச் சீட்டுகளை வழங்க வேண்டும்., வரும் 2026 சட்டமன்றத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் வகையில் அதற்கான பணிகளை தற்போதே ஆரம்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினா்கள் மாரிச்சாமி, சாகுல் ஹமீது, மகேஸ்வரி, பராசக்தி, தேவா என்ற தேவதாஸ், ஒன்றிய செயலா்கள் பூசைபாண்டியன், பெரியதுரை, சோ்மத்துரை, வெள்ளத்துரை, கிறிஸ்டோபா், ராமச்சந்திரன், குணசேகரன், பால்ராஜ், நகர செயலா்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூா் செயலா்கள் ரூபி பாலசுப்பிரமணியன், குருசாமி, மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com