முதலமைச்சா் கோப்பை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம்

Published on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்டஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லுரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் செப்.10 முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செப். 23 ஆம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தோ்வுகள் நடைபெற்று வருவதால் செப். 23-க்கு பதிலாக செப். 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இ. சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.

இவ் விளையாட்டுப் போட்டிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக கைப்பேசி எண். 7708330531, 7010797695 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com