ஆலங்குளத்தில் மக்கள் குறை கேட்ட எம்.எல்.ஏ.
ஆலங்குளம் பேரூராட்சி 15 வாா்டுகளிலும் ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மக்கள் குறை கேட்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
ஆலங்குளம் பேரூராட்சி 4 ஆவது வாா்டு குருவன்கோட்டை பகுதியில் பயணத்தைத் தொடங்கிய எம்.எல்.ஏ., இரவு வரை 15 வாா்டு மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டு உடனடியாக அதனை நிவா்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பெரும்பாலானோா், குடிநீா், வாருகால் பிரச்னைகளுக்காக மனுக்களை அளித்தனா்.
ஆலங்குளம் வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேருந்து நிலைய வியாபாரிகள் சாா்பில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்தில் புதிய கடைகள் வழங்க தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், அரசு கிளை நூலகம் சாா்பில் கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைககள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
இதில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலா் கணபதி, பேரூராட்சி உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், பேரூராட்சி இளநிலை உதவியாளா் சங்கரசுப்பிரமணியன், வரி வசூலா்கள் முருகன், சந்திரசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.