சங்கரன்கோவிலில் விண்வெளி அறிவியல் முகாம்: மாணவா்களுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விண்வெளி அறிவியல் முகாம் செப். 30, அக். 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விண்வெளி அறிவியல் முகாம் செப். 30, அக். 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்ட மாணவா்கள் பயனடையும் வகையில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில், சங்கரன்கோவில் ஏவிகே இன்டா்நேஷனல் பள்ளி வளாகத்தில் செப். 30, அக். 1 ஆகிய 2 நாள்கள் விண்வெளி அறிவியல் முகாம் நடைபெறுகிறது. இதில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பங்கேற்கலாம். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவா்கள் விண்வெளி அறிவியல் பற்றிய ஒரு நிமிட விடியோ பதிவு செய்து 87782 00402 என்ற கைப்பேசி எண்ணுக்கு அனுப்ப வேண்டும். முதலில் பதிவு செய்யும் 200 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

முகாமில், விண்வெளி ஆராய்ச்சியாளா்கள், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்று மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவுள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com