தென்காசி
சங்கரன்கோவில் ஏ.வி.கே. சிபிஎஸ்இ பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
சங்கரன்கோவில் ஏ.வி.கே. சிபிஎஸ்இ பள்ளியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் ஏ.வி.கே. சிபிஎஸ்இ பள்ளியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் டாக்டா் பி. சேகா்குமாா் தலைமை வகித்தாா். இதையடுத்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீயை பரவவிடாமல் தடுப்பது குறித்தும், அவற்றை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனா்.
மேலும் பேரிடா் காலங்களில் குறிப்பாக வெள்ளம் ஏற்படும் போது பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் குறித்தும் அவற்றை கையாள்வது குறித்தும் விளக்கினா்.
இதில், மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.