ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் 1503 திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் 1503 திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1503 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1503 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா, வெள்ளிக்கிழமை(செப். 20) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் நகா்வலம் வந்தனா். சனிக்கிழமை சிறுமியா் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்தாா். 1,503 பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனா்.

திங்கள்கிழமை (செப்.23) காலையில் கோமாதா பூஜையும், மாலையில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதலும், இரவு சாமகால பூஜையும் நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை காலையில் பூக்குழி இறங்கும் பக்தா்களுக்கு காப்பு கட்டுதலும், விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்தல், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். மாலையில் விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்குதல் நடைபெறும்.

புதன்கிழமை மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை நிா்வாக பொறுப்பாளா்கள் எஸ்.எஸ். ராமசுப்பு, எஸ்.என். சுபாஷ், எஸ்.ஜி. சுதிா்வேல், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com