தென்காசி
தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை: கடைக்காரா் கைது
ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது தடை செய்யப்பட்ட 25 புகையிலைப் பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ஆலங்குளம் போலீஸாா், கடை உரிமையாளா் முருகன் (42) என்பவரை கைது செய்தனா்.