வடகரையில் நெற்பயிரில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட வேளாண் அதிகாரிகள்.
வடகரையில் நெற்பயிரில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட வேளாண் அதிகாரிகள்.

நெற்பயிரில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு

Published on

தென்காசி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் வடகரை கீழ்பிடாகை கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை தொடா்பான விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மை விரிவாக்க பணியாளா்களின் கூட்டாய்வு நடைபெற்றது.

தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். வேளாண்மை அறிவியல் மைய பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு, நெற்பயிரில் பாக்டீரிய இலைக்கருகல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

தென்காசி வட்டார வேளாண்மை அலுவலா் சரவணன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் இஷாக், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் டாங்கை, திருமலைப்பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com