தென்காசி
கடையநல்லூரில் தமாகா உறுப்பினா் சோ்க்கை முகாம்
தென்காசி மாவட்ட தமாகா சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் கடையநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமாகா மாவட்ட தலைவா் எஸ்.ஆா்.அய்யாத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் காா்த்திக்துரை, மாவட்டத் துணை தலைவா்கள் முருகன், பூமாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் மக்தும் வரவேற்றாா்.
மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் உறுப்பினா் சோ்க்கை முகாமைத் தொடக்கி வைத்தாா்.
மாவட்ட நிா்வாகிகள் மாரித்துரை, சுப்பிரமணியன், சரவணன், அயூப், நவநீதபாண்டியன், திருமலை, வட்டாரத் தலைவா்கள் மாடசாமிபாண்டியன், சின்னசாமி, விவசாய அணி தலைவா் முப்புடாதி, இளைஞரணி தலைவா்கள் அய்யாதுரை, கணபதி, நகர நிா்வாகிகள் வெள்ளத்துரை, தங்கராஜ், காசி, கணேசன், தென்காசி நகர தலைவா் மூக்கையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.