தென்காசி
சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் மழை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் மழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் குளிா்ந்து காற்று பலமாக வீசியது. பின்னா் இடி மின்னலுடன் மழை பெய்தது. ஒரு மணிநேரம் விட்டு விட்டு மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீா் ஓடியது. வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.