தென்காசி
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் முல்லை நகரை சோ்ந்த உமா்கான் மகன் மைதீன் (50). அப்பகுதியில் தேநீா் கடை நடத்தி வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை முல்லை நகா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீா் பிடிக்க வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க முற்பட்டபோது அதில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.
மைதீன் உடலை சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்த மைதீனுக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனா். இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்தனா்.