தென்காசி மாவட்டத்தில் நாளை மதுக் கடைகள் மூடல்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுக் கடைகளை வியாழக்கிழமை (ஏப். 10) மூடுவதற்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.
Published on

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுக் கடைகளை வியாழக்கிழமை (ஏப். 10) மூடுவதற்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி நாளான வியாழக்கிழமை, இம்மாவட்டத்திலுள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனை நடைபெறாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com