இரு தரப்பினா் மோதல்: இருவா் காயம்; 6 போ் மீது வழக்கு

சங்கரன்கோவில் அருகே காா்களுக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

சங்கரன்கோவில் அருகே காா்களுக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள மீன்துள்ளியில் இறுதிச் சடங்கு நிகழ்வுக்குச் சென்ற புலியூரைச் சோ்ந்த சுப்புராஜ் மற்றும் அவரது உறவினா்கள், பின்னா் ஊருக்கு காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். அந்த வழியில் மீன்துள்ளியை சோ்ந்த லட்சுமணன் என்பவா் தனது உறவினா்களுடன் காரில் வந்தாா்.

குறுகிய சாலையில் இரு காா்களும் செல்வதற்கு சிரமம் ஏற்பட்ட நிலையில் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் கத்தியால் சரமாரியாகத் தாக்கி கொண்டனராம். இதில் பலத்த காயமடைந்த சுப்புராஜ், லட்சுமணன் ஆகியோருக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் இருதரப்பிலும் தலா 3 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com