சங்கரன்கோவிலில் நூலக கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்
சங்கரன்கோவிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நூலக இணைப்புக் கட்டடத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், கோமதி அம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு, ரூ.22 லட்சத்தில் கூடுதல் இணைப்புக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இக் கட்டடத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சியில் திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் குத்துவிளக்கேற்றினாா். ராணிஸ்ரீகுமாா் எம்.பி., ஈ. ராஜா எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதைத்தொடா்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் மாவட்ட நூலக அலுவலா் சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையா் சபாநாயகம், வட்டாட்சியா் பரமசிவன், நூலகா் முருகன், சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வெள்ளைச்சாமி, நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், நூலகா்கள் சிவக்குமாா், அப்துல் காதா் ஜெய்லானி, திருமலைகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.