தென்காசி
தென்மலையில் நூலக கட்டடம்: காணொலியில் முதல்வா் திறப்பு
தென்மலையில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட பொது நூலக கட்டடத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள தென்மலையில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட பொது நூலக கட்டடத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன் முத்தையாபாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவா் மீனலதா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா்.
கிளை நூலக அலுவலா் மாரியம்மாள் வரவேற்றாா்.