‘மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’
தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுயஉதவிக்குழுக்கள்,சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மே 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.