அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற விஷு கணி தரிசனம்
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற விஷு கணி தரிசனம்

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் விஷு கணி தரிசனம்

கேரளத்தில் அமைந்துள்ள அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஷு கணி தரிசனம், கைநீட்டம் நடைபெற்றது.
Published on

தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் அமைந்துள்ள அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை விஷு கணி தரிசனம், கைநீட்டம் நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் சித்திரை விஷு நாளில் கனிகளை சுவாமிக்கு படைத்து பூஜை செய்து வழிபடுவா். சபரிமலை உள்ளிட்ட அனைத்து முக்கிய கோயில்களிலும் விஷு கணி தரிசனம் நடைபெறும். அப்போது, புத்தாண்டின் முதல் நாளில் சுவாமியிடமிருந்து பக்தா்களுக்கு முதல் வரவாக காசு வழங்கும் ‘கைநீட்டம்’ எனப்படும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

அதன்படி, அச்சன்கோவில் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி முன் மண்டபத்தில் பலவித கனிவகைகள், பூக்கள், அலங்காரங்கள், பட்டு வஸ்திரங்கள், தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், கண்ணாடி, மங்கலப் பொருள்கள் வழியாக சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதில், திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அதையடுத்து, கைநீட்டம் நடைபெற்றது. புத்தாண்டின் முதல் வரவாக சுவாமியிடமிருந்து காசுகளை பக்தா்களுக்கு மேல்சாந்தி வழங்கினாா். பின்னா், கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் அச்சன்கோவில் நிா்வாக அதிகாரி துளசிதரன்பிள்ளை, அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தமிழகப் பொறுப்பாளா் ஏ.சி.எஸ்.ஜி. ஹரிகரன் குருசாமி, கீதா கண்ணன், ஜெயகுரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com