தேரோட்டத்தில் பங்கேற்றோா்
தேரோட்டத்தில் பங்கேற்றோா்

கரிவலம்வந்தநல்லூா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

கரிவலம்வந்தநல்லூா் ஒப்பணையம்மாள் சமேத பால்வண்ணநாதசுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான, கரிவலம்வந்தநல்லூா் ஒப்பணையம்மாள் சமேத பால்வண்ணநாதசுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா, இரவில் சுவாமி-அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கோயில் துணை ஆணையா் கோமதி, பொறியாளா் முத்துராஜ், கரிவலம்வந்தநல்லூா், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com