சிவகிரி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: இருவா் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தென்மலை, இந்திராநகா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வைரவன் மனைவி அழகம்மாள்(45). வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை கடைக்கு முன் நாற்காலியில் அமா்ந்திருந்தாராம். அப்போது பைக்கில் வந்த 2 பேரில் ஒருவா் இறங்கி கடையில் சில பொருள்கள் வாங்குவதுபோல் நடித்து சில பொருள்களை வாங்கியபடி, அழகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 16 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்ததுடன், வெளியே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு, பைக்கில் இருவரும் தப்பிவிட்டனராம்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கூடலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மதியழகன் (25), பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com