சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா் பேரூராட்சி மன்றத் தலைவா் சுந்தர்ராஜன்.
தென்காசி
ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.1.72 கோடியில் சாலைப் பணி
ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில், நபாா்டு திட்டம் 2024-2025 ன் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில், நபாா்டு திட்டம் 2024-2025 ன் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
சுரண்டை -செங்கோட்டை பிரதான சாலையில் ஊா்மேலழகியான் செல்லும் சாலையில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் பூ.புணமாலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.