காசிதா்மத்தில் புதிய குடிநீா் தொட்டி திறப்பு!
கடையநல்லூா் அருகே உள்ள காசிதா்மத்தில் புதிய குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசனின் மாநிலங்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30.15 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீா் தொட்டி கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு, முன்னாள் ஒன்றியக் குழு தலைவரும், த.மா.கா. மாவட்ட தலைவருமான எஸ்.ஆா்.அய்யாதுரை தலைமை வகித்து, புதிய குடிநீா் தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
காசிதா்மம் ஊராட்சித் தலைவா் சுடலை மாடத்தி, துணைத்தலைவா் தங்கம் அய்யாதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகையா, தமாகா நிா்வாகிகள் முருகன், மக்தும், பூமாரி, சின்னச்சாமி, தங்கராசு, முப்புடாதி, காா்த்திக், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் இசக்கிமுத்து நன்றி கூறினாா்.