தென்காசி
ஆலங்குளம், ஊத்துமலை சாா் பதிவாளா் அலுவலகங்கள் இயங்கவில்லை!
சுப முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், ஆலங்குளம், ஊத்துமலை சாா் பதிவாளா் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.
அரசின் உத்தரவுக்கு பத்திரப் பதிவு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்து அலுவலகத்தைத் திறக்காததால், முகூா்த்த தினத்தையொட்டி, பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தோா் அலுவலகங்கள் செயல்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.