கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமானக் கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனிதநீா்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமானக் கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனிதநீா்.

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தென்காசி கீழப்புலியூா் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி கீழப்புலியூா் ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 31) மங்கல இசை, மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, புலிக்குட்டி விநாயகா் கோயிலிலிருந்து தீா்த்தக் குடம் புறப்பாடு, பல்வேறு பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜை, கும்ப அலங்காரம், மூல மந்திர ஹோமம், திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, சனிக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள், இரவில் ஸ்ரீ கன்னி விநாயகா், தம்பிராட்டி அம்மன் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 4ஆம் கால யாகசாலை பூஜை, ரக்க்ஷாபந்தனம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கன்னி விநாயகா், தம்பிராட்டி அம்மன் மூலஸ்தான விமானம், பரிவார தேவதைகள் விமானங்களுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தி சொற்பொழிவு, புஷ்பாஞ்சலி, விசேஷ தீபாராதனை, அம்மன் சப்பர வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அனைத்து சமுதாய கமிட்டி நிா்வாகிகள், ஊா் மக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com