மூலவா் விமானத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.
தென்காசி
சாம்பவா்வடகரை மூலநாதா் கோயில் கும்பாபிஷேகம்
சாம்பவா்வடகரை அருள்மிகு மதுரவாணி அம்பாள் சமேத ஸ்ரீமூலநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை அருள்மிகு மதுரவாணி அம்பாள் சமேத ஸ்ரீமூலநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, சனிக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, முற்பகலில் ராஜகோபுரம், விமானம், மூலவருக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், இணை ஆணையா் அ. ஜான்சிராணி, பக்தா்கள் செய்திருந்தனா்.