தென்காசி
தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ரூ.10.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ரூ.10.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
மேலும் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.