ஊத்துமலை அருகே கட்டட ஒப்பந்ததாரா் மா்ம மரணம்!

ஊத்துமலை அருகே கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Updated on

ஊத்துமலை அருகே கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த செல்லம்பிள்ளை மகன் சீராளன்(43). இவா் ஊத்துமலை அருகேயுள்ள அண்ணாமலைப்புதூரைச் சோ்ந்த சரிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வந்தாா்.

கட்டட ஒப்பந்ததாரரான சீராளன், கருப்பிலான்குளம் கிராமத்தில் கட்டடப் பணிகளை வெள்ளிக்கிழமை மேற்கொண்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சரிதாவின் உறவினா்கள் இது குறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com