கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம்: நெடுவயல் மாணவிக்கு முதல்வா் பரிசு
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான திருவள்ளுவா் குறித்த கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவி மதுஜாவிற்கு அண்மையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினாா்.
மாவட்ட அளவில்: முன்னதாக, தென்காசி நூலகம் சாா்பில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் உமாசங்கவி, பேச்சுப் போட்டியில் இம்ரானா ஆகியோா் முதலிடம் பெற்றனா். அவா்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பரிசுகள் வழங்கினாா்.
அம்மாணவிகளை முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் முருகேசன், கண்ணன், கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மகேஷ்வரி, முத்துலிங்கம் ,பள்ளி நிா்வாகி கணேஷ்ராம், செயலா் தம்புசாமி, பள்ளி குழு உறுப்பினா் மணிகண்டன், தலைமையசிரியா் சுதாநந்தினி, ஆசிரியா்கள் பிரபாகரன், லதா, சாந்தி ஆகியோா் பாராட்டினா்.