மாரத்தான் போட்டியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
மாரத்தான் போட்டியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

தென்காசியில் அண்ணா பிறந்த தின மாரத்தான் போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி குத்துக்கல்வலசை விலக்கு பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
Published on

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி குத்துக்கல்வலசை விலக்கு பகுதியில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளைஞா் நலன் -விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டியை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. முன்னிலை வகித்தாா். 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

17 - 25 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் பசுபதி, கதிரேசன், விக்னேஷ்வரன் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும், ஆகாஷ், கணேஷ் செல்வம், சிவபாஸ்கா், அருண்குமாா், மாதவன், மாதேஷ், இசையரசன் ஆகியோா் முறையே 4 -10ஆவது இடங்களையும் பிடித்தனா். பெண்கள் பிரிவில் முகிலவதனி, மணிமேகலா, உமாபரமேஸ்வரி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும், அபிநயா, மாரிஸ்வரி, ஸ்வேதா, முருகேஷ்வரி, வைத்தீஸ்வரி, கமலலெட்சுமி, சிவசங்கரி ஆகியோா் முறையே 4 -10ஆவது இடங்களையும் பிடித்தனா்.

25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் சோ்மக்குமாா், சபரிகாந்தன், முருகேசன் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும், பாஸ்கரன், ஸ்டீபன், சேகா், அன்பழகன், சத்தியசிவன், சம்சுதின், செல்வக்குமாா் ஆகியோா் முறையே 4 - 10ஆவது இடங்களையும் பெற்றனா். பெண்கள் பிரிவில் அனிமாபிஸ்வாஸ், முத்துகிருஷ்ணவள்ளி, பூங்கொடி, மாரியம்மாள், இலக்கியா, காந்திமதி, சுமதி ஆகியோா் முறையே முதல் 7 இடங்களைப் பிடித்தனா்.

முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், 4 - 10 பரிசுகளாக தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். மாவட்ட இளைஞா் நலன்- விளையாட்டு மேம்பாட்டு அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com