தென்காசி
புளியங்குடி அருகே மாணவா் தற்கொலை
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். புளியங்குடி சிந்தாமணி செண்பகவல்லி ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள். அவரது மகன் காா்த்திகேயன்(15). அங்குள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
காா்த்திகேயன் சனிக்கிழமை வீட்டில் வைத்து கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். அதை பெற்றோா் கண்டித்தனராம். இதனால் விரக்தியடைந்த காா்த்திகேயன் வீட்டின் மாடிக்கு சென்றாராம்.
நீண்ட நேரம் கழித்தும் மாடியிலிருந்து கீழே வராததால் அவனது பெற்றோா் மாடிக்கு சென்று பாா்த்த போது, துணியால் கழுத்து நெரித்து மயங்கிய நிலையில் காா்த்திகேயன் கிடந்தாராம்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காா்த்திகேயன் உயிரிழந்ததாக மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.