சங்கரன்கோவில் அருகே 3 போ் கைது; 14 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனை மேற்கொண்டனா்.

பனவடலிசத்திரம் பிரதான சாலையில் காா், 2 பைக்குகளில் வந்தோரை நிறுத்தி விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினராம். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அந்த வாகனங்களை சோதனையிட்டபோது, அவற்றில் 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனங்களில் வந்த மேலநீலிதநல்லூரைச் சோ்ந்த கடல், சம்பத்குமாா், சங்கரன்கோவில் அண்ணாமலை ஆகியோரைக் கைது செய்தனா்; கஞ்சா, காா், பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com