தென்காசி
கடையநல்லூா் நகராட்சி பணியாளா்களுக்கு சீருடை
கடையநல்லூா் நகராட்சிப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், அலுவலக உதவியாளா்கள் ,ஓட்டுநா்கள் உள்ளிட்ட 75 போ்களுக்கு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் சீருடை வழங்கினாா். நகா்மன்ற உறுப்பினா் முகமதுஅலி,
சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், மேலாளா் சண்முகவேல், சுகாதார ஆய்வாளா்கள் மாதவ ராஜ்குமாா், சிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.