பாதயாத்திரை பக்தா்களுக்கு 
காவல்துறையினா் அறிவுரை

பாதயாத்திரை பக்தா்களுக்கு காவல்துறையினா் அறிவுரை

தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு செங்கோட்டை காவல் துறை சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
Published on

தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு செங்கோட்டை காவல் துறை சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

காவல் ஆய்வாளா் பாலமுருகன் செங்கோட்டையிலிருந்து பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இரவு நேரங்களில் பக்தா்கள் சாலையோரமாக நடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு பைகளில் சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கா்களை ஒட்டி தகுந்த அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com