கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு பூஜை.
கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு பூஜை.

சாம்பவா்வடகரை ஸ்ரீமூலநாதா் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

சாம்பவா்வடகரை ஸ்ரீமதுரவாணி அம்பாள் சமேத சுயம்பு ஸ்ரீமூலநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Published on

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீமதுரவாணி அம்பாள் சமேத சுயம்பு ஸ்ரீமூலநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு 3ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து காலை 11 மணிக்கு மேல் ராஜகோபுரம், விமானம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அ.ஜான்சிராணி, அறங்காவல் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் பக்தா்கள் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com